இலங்கையை உலுக்கிய டிட்வா: 1,593 கி.மீ. தொடருந்து பாதையில் 478 கி.மீ. மட்டுமே பயன்பாடு



 டிட்வா சூறாவளி ஏற்படுத்திய பேரழிவின் பின்னணி தொடர்ந்து வெளிப்படுகிறது. சூறாவளி காரணமாக இலங்கையின் மொத்த 1,593 கிலோமீட்டர் தொடருந்து பாதைகளில் வெறும் 478 கிலோமீட்டர் மட்டுமே தற்போது செயல்பாட்டில் உள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையர் ஜெனரல் பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி அறிவித்துள்ளார்.

சூறாவளி தாக்கம் காரணமாக பல மாவட்டங்களில் போக்குவரத்து, விவசாயம், மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.


விவசாயத் துறையின் ஆரம்ப கணக்கெடுப்பின்படி:

  • 1,777 குளங்கள்,
  • 483 அணைகள்,
  • 1,936 கால்வாய்கள்,
  • 328 விவசாய வீதிகள் சேதமடைந்துள்ளன.


மேலும், சுமார் 137,265 ஏக்கர் பயிர் நிலங்கள் மற்றும் 305 சிறு நீர்ப்பாசன கால்வாய்கள் முற்றிலும் அழிந்துள்ளன.

பாதிப்பு ஏற்பட்ட சாலைகளில் இதுவரை 246 வீதிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் நாடு முழுவதும் 22 பாலங்கள் முழுமையாக சேதமடைந்து பயன்பாடின்றி உள்ளன.

தொலைத்தொடர்பு சேவைகள் 91% வரை மீட்டெடுக்கப்பட்டுள்ளன, எனினும் நுவரெலியா மாவட்டத்தில் புனரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மின்சார துறையில் ஏற்பட்ட சேதமும் பெரிது. மொத்தம் 35 இலட்சத்து 31 ஆயிரத்து 841 மின்சார இணைப்புகளில் 72% சேவை மீண்டும் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகபி.கே பிரபாத் . சந்திரகீர்த்தி தெரிவித்தார்

புதியது பழையவை